ஆன்லைன் குரல் ரெக்கார்டர்

பதிவு செய்யத் தொடங்க மைக்ரோஃபோன் ஐகானைக் கிளிக் செய்யவும்

இலவச ஆன்லைன் குரல் ரெக்கார்டர்: எந்த ஒலியையும் பதிவு செய்து ஆடியோ கோப்பைப் பதிவிறக்கவும்

எளிதாக சில ஒலிகளை பதிவு செய்ய வேண்டுமா? எங்கள் இலவச ஆன்லைன் ஆடியோ ரெக்கார்டர் உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி உங்கள் குரல், உரையாடல் அல்லது எந்த வகையான ஒலியையும் பதிவு செய்ய அனுமதிக்கிறது. உங்கள் கணினி, டேப்லெட் அல்லது கைபேசி ஆகியவற்றில் எங்கள் ஆடியோ பதிவு மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

உங்கள் குரலைப் பதிவுசெய்து, உங்களுக்கு வேண்டிய பதிவின் பகுதியைத் தேர்ந்தெடுத்து ஆடியோ கோப்பை இலவசமாகப் பதிவிறக்கவும். இது எளிமையான மற்றும் பல்துறை சார்ந்த சிறந்த ஆன்லைன் குரல் ரெக்கார்டர் ஆகும்.

எங்கள் ஆன்லைன் ஆடியோ ரெக்கார்டரைப் பயன்படுத்தி ஒலியைப் பதிவு செய்வது எப்படி?

 1. பதிவைத் தொடங்க மைக்ரோஃபோன் ஐகானைக் கிளிக் செய்யவும்,
 2. உங்கள் மைக்ரோஃபோனை அணுக உங்கள் பிரௌசருக்கு அனுமதியளிக்கவும்,
 3. பேசத் தொடங்குங்கள் அல்லது ஒலி எழுப்புங்கள்.

எங்கள் ஆன்லைன் குரல் ரெக்கார்டரை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்?

இது துல்லியமானது, பயன்படுத்த எளிதானது மற்றும் முற்றிலும் இலவசமானது. எங்கள் குரல் ரெக்கார்டர் மூலம் எந்த வகையான ஒலியையும் பதிவு செய்யலாம்: ஒற்றை குரல், உரையாடல், இசை அல்லது தனிப்பயனாக்கப்பட்ட ஆடியோ. நீங்கள் ஒலியைப் பதிவுசெய்த பிறகு, நீங்கள் வைத்திருக்க விரும்பும் பகுதியைத் தேர்ந்தெடுத்ததும், உங்கள் ஆடியோ கோப்பை ஏற்றுமதி செய்து, அதை WAV வடிவில் இலவசமாகப் பதிவிறக்கவும்.

இது பயன்படுத்த மிகவும் எளிதானது. உரையாடலைப் பதிவுசெய்து அதன் பிறகு அந்த ஆடியோ கோப்பைக் கேட்க விரும்பும் எவருக்கும் இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

இந்த ஆன்லைன் பதிவு மென்பொருள் என்னென்ன அம்சங்களை வழங்குகிறது?

 • இலவசம் மற்றும் ஆன்லைன்
 • மென்பொருளை பதிவு செய்யவோ நிறுவவோ தேவையில்லை
 • நீங்கள் வைத்திருக்க விரும்பும் பதிவின் பகுதியை எளிதாக செதுக்கி சேமிக்கலாம்.
 • உங்கள் ஆடியோ கோப்பை WAV வடிவில் எளிதாகவும் இலவசமாகவும் சேமிக்கலாம்.
 • தேவைக்கேற்ப பதிவை இடைநிறுத்தவோ அல்லது மொத்தமாக நிறுத்தவோ செய்யலாம்

ஆன்லைன் ஆடியோ ரெக்கார்டரின் நன்மைகள் என்ன?

ஆடியோவைப் பதிவுசெய்து சேமிப்பதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. உதாரணத்திற்கு:

எத்தனை உரையாடல்கள், தொலைபேசி அழைப்புகள், படிப்பு கோப்புகள் அல்லது குழு சந்திப்புகளை நீங்கள் மீண்டும் கேட்க விரும்புகிறீர்கள்? எதிர்காலத்தில் அவற்றை எளிதாகப் பதிவு செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடியோ கோப்புகளைப் நம்மால் மீண்டும் கேட்க முடியும்.

நீங்கள் பேசும்போது குறிப்புகளை எடுத்துக்கொள்வது கடினமாகவும் திறனற்றதாகவும் இருக்கும். ஒரே நேரத்தில் எழுதுவது, கவனிப்பது மற்றும் பேசுவது ஆகியவற்றை செய்தால் ஒருமுகப்படுத்த இயலாமல், தவறுகளுக்கு வழிவகுக்கும்.

நீங்கள் விரும்பும் போது ஆடியோவை மீண்டும் கேட்கலாம் என்பதால் ஆன்லைன் ரெக்கார்டரைப் பயன்படுத்துவது உங்கள் உரையாடல் அல்லது சந்திப்பில் அதிக கவனம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது, . உரையாடலில் அதிக கவனம் செலுத்துவது தவறான புரிதல்களைத் தவிர்க்க உதவும்.

ஒரு சிறந்த யோசனை உங்கள் மனதில் தோன்றலாம். அதை ஆராய உங்களுக்கு நேரம் இல்லை, அதை எழுதுவதற்கு பேனா மற்றும் காகிதம் இல்லை. அந்த நேரத்தில் ஒரு ஆன்லைன் குரல் ரெக்கார்டர் உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்து, உங்கள் WAV கோப்பைச் சேமிக்க அனுமதித்து மீண்டும் அதைக் கேட்க உதவுகிறது.

ஆன்லைன் குரல் ரெக்கார்டர் என்றால் என்ன?

ஆடியோ ரெக்கார்டர் அல்லது ஒலி ரெக்கார்டர் என்று அறியப்படும் ஆன்லைன் ரெக்கார்டர் உற்பத்தி செய்யப்படும் எந்த வகையான ஒலியையும் பதிவு செய்யும் ஒரு தொழில்நுட்பமாகும்.

இந்த கருவிகள் பயன்படுத்த மிகவும் எளிதானது. மைக்ரோஃபோன் ஐகானைக் கிளிக் செய்து, நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் மைக்ரோஃபோனைப் பயன்படுத்த உங்கள் பிரவுசரை அனுமதித்து, பேசவோ, பாடவோ அல்லது ஏதேனும் ஒலியை உருவாக்கத் தொடங்கவும். ஏற்றுமதி அம்சத்திற்கு நன்றி கூற வேண்டும், WAV கோப்பாகச் சேமிக்கக்கூடிய ஆடியோவை விரைவாகச் சேமித்து பதிவிறக்கம் செய்து கொள்ள உதவுகிறது.

ஆன்லைன் ரெக்கார்டரை யார் பயன்படுத்துகிறார்கள்?

மென்பொருளை வாங்கவோ அல்லது நிறுவவோ தேவையில்லாமல் ஆடியோவை எளிதாக பதிவு செய்ய விரும்பும் எவருக்கும் ஆடியோ ரெக்கார்டர் கருவிகள் உபயோகமானவை. மாணவர்கள், பரபரப்பான தொழில் வல்லுநர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பலரும் இதைப் பயன்படுத்தலாம்.

ஆன்லைன் ரெக்கார்டர் முக்கியமான உரையாடல்களைப் பதிவுசெய்ய விரும்புபவர்களின் வாழ்க்கையை எளிதாக்கலாம் அல்லது குறிப்புகளை எடுக்கும்போது பல்பணி செய்வதைத் தவிர்க்கலாம். தங்கள் எண்ணங்களை தட்டச்சு செய்யவோ அல்லது எழுதவோ வேண்டியதில்லாமல் இருப்பதை விரும்புபவர்களுக்கு இது உதவும்.

எங்களுடைய மென்பொருளானது பயன்படுத்த எளிதானதாகவும் யாரும் இலவசமாக அணுகக்கூடியதாகவும் இருப்பதால், உங்கள் ஆடியோ பதிவை எளிதாகச் சேமித்து, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கேட்கலாம்.

பழுது நீக்கம் செய்தல்:

பின்வரும் சிக்கல்கள் ஏற்படலாம்:

 • ஒலியைப் பெறுவதில் தோல்வி: நீங்கள் பயன்படுத்த விரும்பும் மைக்ரோஃபோனை உங்கள் கணினி கண்டறிந்துள்ளதை உறுதிசெய்யவும்.
 • மைக்ரோஃபோனை அணுகுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை: பிரவுசரின் முகவரிப் பெட்டியில் உள்ள சிறிய மைக்ரோஃபோன் ஐகானைக் கிளிக் செய்யவும் (டிக்டேஷனைத் தொடங்க ஐகானைக் கிளிக் செய்த பிறகு இது தோன்றும்). மைக்ரோஃபோனைப் பயன்படுத்த அனுமதிக்கும் அனுமதியை இங்கே மாற்றலாம்.
 • பிரவுஸர் தவறான மைக்ரோஃபோனை தேர்ந்தெடுப்பது: அனுமதியளிக்கும் அமைப்புகளை அணுகவும் (மேலே பார்க்கவும்) மற்றும் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து சரியான மைக்ரோஃபோனைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களுக்கு வேறு சிக்கல்கள் இருந்தால், எங்களைத் தொடர்பு கொண்டு சிக்கலை விரிவாக விவரியுங்கள்.

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை

உங்கள் தகவலின் பாதுகாப்பு மற்றும் உங்கள் தனியுரிமையின் பாதுகாப்பிற்கு நாங்கள் முழுமையாக முன்னுரிமை அளிக்கிறோம். உங்களின் பதிவு செய்யப்பட்ட ஆடியோ உங்களால் மட்டுமே அணுகக்கூடியது மேலும் எங்கள் சேவையகங்களில் சேமிக்கப்படாது.

ஆன்லைன் குரல் ரெக்கார்டரை எவ்வாறு இயக்குவது?

ஆடியோ ரெக்கார்டரை இயக்குவது எளிது. மைக்ரோஃபோன் ஐகானைக் கிளிக் செய்து, நீங்கள் பதிவுசெய்ய விரும்பும் ஒலியை உருவாக்கத் தொடங்குங்கள். நீங்கள் முடித்தவுடன் நிறுத்து என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். WAV கோப்பைப் பதிவிறக்க எங்கள் ஆன்லைன் ரெக்கார்டர் உங்களை அனுமதிக்கும். பதிவு அல்லது கட்டணம் எதுவும் தேவையில்லை, இது முற்றிலும் இலவசம். இப்போதே முயற்சி செய்யுங்கள்!

ஆடியோ ரெக்கார்டரை எவ்வாறு செயல்படுத்துவது?

ஆன்லைன் ரெக்கார்டர் பயன்படுத்த மிகவும் எளிதானது. மைக்ரோஃபோன் ஐகானைக் கிளிக் செய்யவும். அது கேட்கும் போது, ​​உங்கள் மைக்ரோஃபோனை அணுக எங்களின் ஒலி ரெக்கார்டரை அனுமதித்து, பேசத் தொடங்குங்கள். இப்போது முயற்சிக்கவும், இது இலவசமே!

ஆன்லைன் ஆடியோ பதிவை கோப்பாக சேமிக்க முடியுமா?

உங்கள் ஆன்லைன் ஆடியோ பதிவை சேமிப்பது எளிது. உங்கள் ஆடியோவைப் பதிவுசெய்து முடித்ததும், நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் ஆடியோவின் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், உங்கள் சாதனத்தில் கோப்பைப் பதிவிறக்க, சேவ் என்பதைக் கிளிக் செய்யவும்.